இனிமையான
சொற்கள் என்றும்
வெற்றியே.
ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம்.
உங்களின் வழிச் செலவு,
எங்களின் வாழ்க்கை செலவு.
டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம். இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது.
மீட்டருக்கு மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு.
அதனால் தான் சொல்கிறேன்,சொல்லும் விதத்தில் வெல்லலாம்.
ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்.
மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?
வார்த்தைகளில் இல்லை வெற்றி.
அது வெளிவரும் விதத்தில்தான்
வெற்றி இருக்கிறது.
நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.
ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்…
வீட்டு சமையலுக்கு ஒரு நாள்
விடுமுறை விடுங்கள்.
மென்மையான சொற்கள்
ஆனால் காரியம் சாதிக்கும்
நேர்மறை எண்ணங்கள்
என்றும் வெற்றியே.