Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
941
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH NOVEMBER 23, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

TODAY'S SAINT

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
TODAY'S SAINT

நவம்பர் 23ம் நாளாகிய இன்று 

*மறை சாட்சியும் திருத்தந்தையும்* 

*புனித முதலாம் கிளமெண்ட்,* 

*அயர்லாந்து நாட்டை சேர்ந்த மறைபரப்பு போதாகரும், துறவு மட தலைவரும்* ஆன
 
*புனித கொழும்பானுஸ்*
மற்றும் 

*மறைசாட்சியும், குருவானவரும்* ஆன 

*அருளாளர் மீக்யெல் அகஸ்டின் ப்ரோ*

இவர்களின் விழா நாள். 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 23ம் நாள், இறைமக்களின் பக்தி, நம்பிக்கை, விசுவாசத்தை கருத்தில் கொண்டு, இவர்களில் ஒருவரின் நினைவை (விருப்ப) *நினைவு திருப்பலி* கொண்டாடி சிறப்பிக்க தாய் திருச்சபை அழைப்பு விடுக்கின்றது.

திருத்தந்தை *புனித முதலாம் கிளமெண்ட்* 35ம் ஆண்டில் ரோமையில் யூத பெற்றோர்களுக்கு மகனாக பிறந்தார். பின்  கிறிஸ்தவராகி முதல் திருத்தந்தை புனித பேதுருவின் சீடராக இருந்து இறைப்பணி ஆற்றினார். மேலும் திருத்தூதர் புனித பவுலோடும் இணைந்து பணியாற்றி இருக்கின்றார். இவர் பேதுருவால் திருபொழிவு செய்யப்பட்டார். 88ம் ஆண்டு இவர் திருச்சபையின் *நான்காவது திருத்தந்தை* ஆகி 99ம் ஆண்டு மறைசாட்சியாக மரித்தார்.

லத்தீனில் *"கிளமெண்ட்"*  என்ற வார்த்தைக்கு *"பரிவுள்ளவர்"*  என்று பொருள். எனவே இவர் *முதலாம் சாந்தப்பர்* என்று இனிய தமிழ் மொழியில் அழைக்கப்படுகிறார். இவர் கொரிந்திய இறைமக்களுக்கு திருமடல் எழுதியுள்ளார். இம்மடல் கிறிஸ்தவ விசுவாச சத்தியங்களை விவரிக்கின்றது. திருத்தந்தை அவர்கள் தொடக்க கால திருச்சபையின் மிக சிறந்த *இறையியல் வல்லுனர்* ஆவார். எனவே இவர் முதல் *திருத்தூதுவ தந்தை (First Apostolic Father)* என்றும் அழைக்கப்படுகிறார்.  திருத்தூதர்களோடு தொடர்புடைய அல்லது அவர்களின் சீடர்களாக இருந்து தொடக்க கால திருச்சபைக்கு வழிகாட்டிகளாக இருந்தவர்கள் தான் *திருத்தூதுவ தந்தையர்* என்று அழைக்கப்படுகின்றனர். மேலும் இவர் *ரோமை நகர் புனித கிளமெண்ட்* என்றும் அழைக்கப்படுகிறார்.

திருத்தந்தை அவர்கள் எழுதிய கடிதங்கள் திருச்சபைகளில் புதிய ஏற்பாட்டுக் கடிதங்கள் போலவே வாசிக்கப்பட்டது. ஆயர்கள் திருச்சபையில் திருத்தூதர்களிடமிருந்து வரும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்கள் என்று வலியுறுத்திய முதல் வல்லுநர் இந்த திருத்தந்தை தான்.

திருத்தந்தை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்க,மறுத்ததால் கொடுங்கோலன் ட்ரோஜனால் நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கபட்டார். இவர் சிறையில் இருக்கும் போது அங்கு கிறிஸ்துவத்தை போதித்தார்.ஒரு முறை சலவைக்காரர்கள் நீரின்றி தவித்த பொழுது புனிதர் இறைவனை வேண்டி மன்றாட, அங்கு ஒரு நீரூற்று பெருக்கெடுத்தது. இதனால் கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டு அனைவரும் கிறிஸ்துவத்தை தழுவினர். இறுதியில்,திருதந்தையின் கழுத்தில், கல்லை கட்டி,கடலில் தள்ளி  கொன்றனர். இவ்வாறு திருத்தந்தை கிறிஸ்துவிற்காக வேதசாட்சியாக மரித்தார்.

*புனித கொழும்பானுஸ்* 540ம் ஆண்டு  அயர்லாந்து நாட்டில் பிறந்தவர். இவர் பிறப்பதற்கு முன் புண்ணியவதியான இவரின் அன்பு தாய், தான் பெற்றெடுக்கும் குழந்தை பிற்காலத்தில் ஒரு ஞானமுள்ள அறிவார்ந்தவராக விளங்குவார் என்று காட்சியில் கண்டார். அவ்வாறே புனிதரும் மிக சிறந்த மறைபோதாகராக விளங்கினார்.புனிதர் நிறைய துறவு மடங்களை நிறுவினார். துறவு மடங்களுக்கான விதி முறைகளையும்  வகுத்து தந்துள்ளார். திருப்பாடல்களுக்கு விளக்க உரைகள் எழுதியுள்ளார். நம் அன்னை மரியாவிற்கு ஒரு சிறந்த சொற்பொழிவை  அர்பணித்துள்ளார். இறுதி காலத்தில் ஒரு குகையில் தங்கி ஜெப வாழ்க்கை வாழ்ந்து 640ல்  விண்ணகம் சென்றார்.

*அருளாளர் மீக்யெல் அகஸ்டின் ப்ரோ* மெக்ஸிக்கோ நாட்டை சேர்ந்த *இயேசு சபை குருவானவர்*. பிரசிடெண்டை கொலை செய்ய முயன்றார் என்று பொய் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை எதுவும் இன்றி கொல்லப்பட்டு  மறைசாட்சியாக மரித்தவர். *இவரின் வரலாற்று சுருக்கத்தை தனியாக தந்துள்ளேன்*.

அனைவருக்கும் புனித முதலாம் கிளமெண்டே, 
புனித கொழும்பானுஸே, 
அருளாளர் மீக்யெல் அகஸ்டின் ப்ரோவே நினைவு தின வாழ்த்துக்கள்


Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL