Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
930
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH NOVEMBER 12, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*, PRAY THE ROSARY

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
*இன்றைய செபமாலைக்  கருத்துக்கள்.*
PRAY THE ROSARY

*மகிமை நிறை மறையுண்மைகள்.*

*1.  இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், *"அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். எவரையும் பழித்துரைக்கலாகாது; சண்டையிடலாகாது; கனிந்த உள்ளத்தினராய் மக்கள் அனைவரோடும் நிறைந்த பணிவுடன் பழக வேண்டும்."* என புனித பவுல் கூறுகிறார். இத்தகைய குணநலன்களை அன்றாட வாழ்வில் நாம் கொண்டிருக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி  பதிலுரைப்பாடல் திருப்பாடல் 23:4 -ல் *"சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்."*  என கூறப்பட்டுள்ளது. 

நமது இக்கட்டான காலகட்டங்களில் இறைவன் நம்மோடு கூட இருந்து நம்மை பாதுகாப்புடன் வழிநடத்திய தருணங்களுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*3.  தூய ஆவியின் வருகையைத் தியானித்து,*

இன்றைய நற்செய்தி வாசகத்தில் *"பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!”* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார். 

நாமும் கூட பல நேரங்களில் நமது வேண்டுதல்கள் கேட்கப்பட்டு தேவைகள் பூர்த்தியான உடன் இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். அத்தகைய நன்றி மறந்த தருணங்களுக்கு மனம் வருந்தி மன்னிப்பினை நாடி  இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*4. தேவ மாதாவின் விண்ணேற்பைத்  தியானித்து,* 

உத்தரிய ஸ்தலத்தில் சுத்திகரிப்பு நிலையில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் விரைவில் மோட்ச பாக்கியம் அடைய வேண்டி இந்த நான்காவது  10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத்  தியானித்து,*

புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*ஆமென்.*

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL