Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
930
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH NOVEMBER 12, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*, PRAY THE ROSARY

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
PRAY THE ROSARY

*ஒளி  நிறை மறையுண்மைகள்.*

*1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 146:7
*"ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்."* என்று கூறுகிறது. 

இன்று உலகம் முழுவதும் பசியால் வாடும் எண்ணற்ற ஏழைகளின் பசியைப் போக்கவும்,  சிறையில் வாடும் எண்ணற்ற அப்பாவி நிரபராதிகள் விடுதலை அடையவும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,*

*"வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்."* என நமதாண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். 

ஆண்டவரின் வருகையை அனைவரும் அச்சமின்றி ஆவலோடு எதிர் கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,*

ஆன்மாக்களின் மாதமான இந்த நவம்பர் மாதம் முழுவதும் நமது இறந்த  உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களின் ஆன்மாக்களுக்காக நாம் விஷேசமாக திருப்பலி ஒப்புக்கொடுத்தல், செபமாலை செபித்தல், ஏழைகளுக்கு உணவு அளித்தல் ஆகியவற்றை அடிக்கடி செய்வதன் மூலம் உத்தரிய நிலையிலிருக்கும் ஆன்மாக்களை ஆண்டவரின் விண்ணக வீட்டிற்கு அனுப்பும் அற்புத பணியினை நாம் ஆவலுடன் செய்ய இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,*

இன்று விஷேசமாக, மருத்துவப் பணியில் ஈடுபட்டு பின்பு மரித்த மருத்துவர்கள், செவிலியர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,*

குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*ஆமென்.*

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL