*"முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்."* என புனித பவுலடியார் கூறுகிறார்.
அன்று பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்கள் முணுமுணுத்தது போலவும், மோசேயிடம் வாதாடியது போன்றும் இல்லாமல் இறைவனின் சித்தத்தை முழு மனதோடு ஏற்றுக் கொள்பவர்களாகவும், நமக்கு இட்ட பணியை செவ்வனே செய்பவர்களாகவும் இருந்தால் நாம் கடவுளின் மாசற்ற குழந்தைகளாக வாழ்வோம். நாம் இறைவனுக்கு உகந்த பிடித்தமான பிள்ளைகளாக வாழ இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*"ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? "* என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
நமக்கு மீட்பு அளிக்க கூடியவர் நம் தேவன் ஒருவனே. அப்படியிருக்க நாம் இறைவனுக்கு உகழ்ந்த வாழ்வு வாழ்வோமானால் எந்த மானிடருக்கோ, எவ்வளவு அதிகாரம் படைத்த ஒருவருக்கோ அல்லது பலம் மிக்க எந்த படையினருக்கோ கூட நாம் அஞ்சத் தேவையில்லை. நம் மனதில் அச்சத்தை முழுமையாக அகற்றி துணிவினை தூய ஆவியார் தந்தருள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் *"தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது."* என இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
நமது வாழ்வில் சந்திக்கும் துன்பங்கள், வலிகள் அனைத்தும் இயேசுவின் பாடுகளில் நாமும் பங்கு கொள்கிறோம் என்ற புரிதல் நம் மனதில் ஒவ்வொருவருக்கும் வர வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*4. தேவ மாதாவின் விண்ணேற்பைத் தியானித்து,*
கர்தினாலும், இன்றைய புனிதருமான *புனித சார்லஸ் பொரோமியோ* வயிற்றுப் புண், அல்சர் ஆகியவற்றில் இருந்து பரிபூரண சுகம் பெற பாதுகாவலராவார்.
அல்சர் நோயினால் அவதியுறுவோர் அவற்றிலிருந்து குணம் பெற இப்புனிதரின் பரிந்துரையை நாடி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*ஆமென்.*
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.