Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
913
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 27, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

*மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.*, PRAY THE ROSARY

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*

*மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.*
PRAY THE ROSARY

*1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
*"ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்."* என புனித பவுலடியார் கூறுகிறார். பிறரை மன்னித்தலும், பிறருக்கு நன்மை செய்தலும் அன்பின் வெளிப்பாடாகும். கிறிஸ்துவின் அன்பை நாமும் பகிர வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை   சந்தித்ததைத் தியானித்து,* 

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 1:3 
*"அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்."* என நற்பேறு பெற்றவரைப்பற்றி கூறுகிறது. நாமும் இறைவனின் பிள்ளைகளாக நற்பேறு பெற்று இத்தகைய ஆசீர்வாதங்களை பெற வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*3.  குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,*

இன்றைய நற்செய்தியில் இயேசு தொழுகைக் கூடம் ஒன்றில் பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண் ஒருவரை குணமாக்கினார் என்பதைக் காண்கிறோம். பல ஆண்டுகளாக தீய ஆவியின் பிடியில் ஆட்பட்டு மீள முடியாமல் இருப்பவர்கள் இறைவனின் இரக்கப் பெருக்கத்தினால் குணம் பெற்றிட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,*

இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், தூய ஆவியின் துணையை வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,*

தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை  விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*ஆமென்.*

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL