*1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் *"உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வது போலத் தம் மனைவியின்மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்."* என புனித பவுலடியார் கூறுகிறார்.
கத்தோலிக்க திருமண அருட்சாதனம் என்பது ஒரு உடன்படிக்கை. கணவன், மனைவி இருவரும் இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கின்றனர். கத்தோலிக்க தம்பதியினர் அனைவரும் தாங்கள் இறைவனிடம் அளித்த வாக்குறுதிகளை செவ்வனே நிறைவேற்ற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 128:3, *"உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடி போல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்."* எனக் கூறப்பட்டுள்ளது.
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதன் மூலம் அவர் வழங்கும் அபரிதமான ஆசீர்வாதங்களை அனைவரும் அடைய வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
நற்செய்தியில் இயேசு, இறையாட்சிக்கு ஒப்பிடுகின்ற கடுகுவிதை, புளிப்பு மாவு ஆகிய இரண்டும் அளவில் சிறியவை; ஆனால் ஆற்றலில் பெரியவை.
இறையாட்சியும் கூட ஆண்டவர் இயேசுவால் நாசரேத்து என்ற ஒரு சாதாரண சிற்றூரில் தொடங்கப்பட்டு, இன்று இந்த உலகம் முழுவதும் வியாபித்திருப்பதற்கு காரணமான இறைவனுக்கு நன்றி செலுத்தி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,*
அன்னையின் செபமாலை மாதத்தில், நாம் அனுதினமும் செபமாலை செபிப்பது போல் பிறரையும் செபமாலை செபிக்க தூண்டுவோம். அலகைக்கு எதிரான அன்னையின் செபமாலை பக்தி பெருக வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,*
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*ஆமென்.*
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.