Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
902
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 23, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*,PRAY THE ROSARY

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*

PRAY THE ROSARY
*துயர்நிறை மறையுண்மைகள்.*

*1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் 
*"முழுமனத் தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும், ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்."* என புனித பவுலடியார் கூறியது போல அனைவரும் ஒற்றுமையுடன் இறைவனின் பிள்ளைகளாக எந்நாளும் வாழ்ந்திட வரம் வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் *"நிலத்தின் தோற்றத்தையும், வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் நீங்கள், இக்காலத்தை ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?"* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார். 

அறிவியல், மருத்துவம், அரசியல், மற்றும் பொது அறிவு விஷயங்களை அறிந்து தெளிவுடன் இருக்கும் நாம் பல நேரங்களில் சிறிய விஷயங்களில் நேர்மையற்று இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,*

ஐரோப்பா முழுவதும் சென்று மறைபரப்புப் பணி செய்த இன்றைய புனிதர்  கப்பிஸ்ட்றனோ நகர் புனிதர் ஜான் நீதிபதிகளின் பாதுகாவலராவார்.

நீதிபதிகள் நீதியோடு வழக்குகளில் தீர்ப்பு வழங்க தேவையான ஞானத்தை இறைவன் அவர்களுக்குத் தந்தருள வேண்டி  இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,*

வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது  திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,*

நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*ஆமென்.*

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL