Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
896
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 22, 2026 2 MIN READ 3 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

PRAY THE ROSARY, இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*

PRAY THE ROSARY

*ஒளி  நிறை மறையுண்மைகள்.*

*1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் *"அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக."* என புனித பவுலடியார் கூறுகிறார். 

தூய அன்பே நல்வாழ்வின் நல்லதொரு அடித்தளமாகும் என்பதை உணர்ந்து தூய அன்பிற்கு,  நாம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில் *"கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்."* என புனித பவுலடியார் கூறுகிறார். 

உலக செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவுக்கு முன் வெறும் குப்பையே என்பதை நாம் உணர்ந்து கிறிஸ்துவுக்கு மட்டும் நம் வாழ்வில் முக்கியத்துவம் அளிக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,*

நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த புனிதரான இன்றைய புனிதர் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இருபதாம் நூற்றாண்டில் கிறித்துவத்தை குடும்பங்களில் இருந்து பரஸ்பர அன்பின் மூலம் வளர்த்தெடுப்பதில் மிக்க ஆவல் கொண்டார்.  புனிதரின் விருப்பம் முழுமையாக நிறைவேற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,*

அன்னையின் செபமாலை மாதத்தில், நாம் அனுதினமும் செபமாலை செபிப்பது போல் பிறரையும் செபமாலை செபிக்க தூண்டுவோம். அலகைக்கு எதிரான அன்னையின் செபமாலை பக்தி பெருக வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,*

குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*ஆமென்.*

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL