Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
887
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 12, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

PRAY THE ROSARY, *இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*

PRAY THE ROSARY

*ஞாயிறு*

*மகிமை நிறை மறையுண்மைகள்.*

*1.  இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,*

இன்றைய ஞாயிறு திருப்பலி முதல் வாசகத்தில், *"ஆண்டவர் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்."* என எசாயா இறைவாக்கினர் உரைக்கிறார்.

விண்ணகத் தந்தையின்  விண்ணக விருந்திற்கு நம்மையே நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடலில்,
*" உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்."* என திருப்பாடல் 23:6-ல் திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.  

நித்திய பேரின்ப வீட்டை நமக்காக விண்ணகத்தில் கட்டியிருக்கும் நம் தேவனுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*3.  தூய ஆவியின் வருகையைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி இரண்டாம் வாசகத்தில், *"எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்."* என புனித பவுலடியார் கூறுகிறார். 

எந்த நிலையிலும், எந்த சூழலிலும் வளைந்து கொடுக்கும் மனநிலையைக் கொண்ட புனித பவுலைப் போல நாமும் நமது வாழ்வில் வாழ்ந்து காட்டிட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத்  தியானித்து,* 

திருச்சபையின் 261-வது திருத்தந்தையும்,  இன்றைய புனிதருமான திருத்தந்தை 23-ம் அருளப்பர்,  இருபதாம் நூற்றாண்டில் திருச்சபையில் நடந்த முக்கிய நிகழ்வான இரண்டாம் வத்திகான் பொதுச்சங்கத்தை கூட்டியவராவார்.

 இப்புனிதரை நமது திருஅவைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத்  தியானித்து,*

இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*ஆமென்.*

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL