Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
875
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 01, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

PRAY THE ROSARY, *இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
PRAY THE ROSARY
*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*

*01.10.2026 (வியாழன்)*

*ஒளி  நிறை மறையுண்மைகள்.*

*1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,*

பிறந்த இப்புதிய அக்டோபர் மாதத்தில் ஆண்டவர் நம்மை ஆசீர்வாதங்களால் நிரப்பிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,*

கத்தோலிக்க திருச்சபை அக்டோபர் மாதத்தை ஜெபமாலை மாதமாக அனுசரித்து வருகிறது. அக்டோபர் மாதம் ஜெபமாலை அன்னைக்குரிய மாதமாகும். அலகையை அகற்றிட அன்னை அளித்த செபமாலையை இந்த மாதம் முழுவதும் செபிப்போம். தினமும் குறைந்தது நான்கு செபமாலையாவது செபிக்க உறுதி கொண்டு  இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,*
 
*"இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்"* என்று இன்றைய புனிதர் லிசியே நகரின் தெரேசா கூறினார். புனிதர் தம் வாழ்வில் கடைபிடித்த தாழ்ச்சியையும், இறைவனின் கைகளை இறுக பற்றியதையும் நம் வாழ்விலும் நாம் செயல்படுத்திட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், *"அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்."* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

குருத்துவத்திற்கும், இறைப்பணிக்கும் நமது குடும்பங்களில் குழந்தைகளை மனமுவந்து அளித்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,*

இன்றைய நற்செய்தியில், *"நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்."* என இயேசு கூறுவதை நாம் வாசித்தோம்.

குடும்பங்கள் அனைத்திலும் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*ஆமென்.*

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL