Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
869
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH SEPTEMBER 26, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

PRAY THE ROSARY

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
PRAY THE ROSARY
*இன்றைய செபமாலைக்   கருத்துக்கள்.*

சனி

*மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.*

*1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
*"உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே."* என சபைஉரையாளர் நூலில் கூறப்பட்டுள்ளது.

முதுமைவரை பொறுத்திருக்காமல் இளமையிலேயே இறைவனைத் தேடுதல் நலம் என்பதை இளைஞர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத்  தியானித்து,*

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 90:13-ல்,
*"ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்."* என கூறப்பட்டுள்ளது.

நேர்மையற்றோர் நலமாக உள்ளனர். நேர்மையோடு இருக்கும் எனக்கு ஏன் இந்த நிலை?  என்று புலம்பும் மக்களின் மனக்குறைகளை இறைவன் கண்ணுற்று அவர்களது நிலையை மாற்ற வேண்டி இந்த இரண்டாவது  10 மணியை ஒப்புக் கொடுப்போம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

*3.  குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,*

இன்றைய புனிதர்களான *புனித கோஸ்மாஸ்* மற்றும் *புனித தமியான்* இரட்டையர்கள் ஏழைகளுக்கு செய்த தொண்டினால் குணமளிக்கும் வல்லமையை இறைவனிடம் இருந்து பெற்றனர். எண்ணற்ற மக்கள் கிறிஸ்தவர்களாக மனம்மாற காரணமாக இருந்த இருவரும் மறைசாட்சிகளாக மரித்தனர். இந்த இரு புனிதர்களின் புனித வாழ்க்கையை நாம் முன்மாதிரியாகக் கொள்ள  இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,*

நாளை ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று ஆண்டவரின் திருவுடலை வாங்க தகுதிபெற நாம் நல்லதொரு ஒப்புரவு அருட்சாதனத்தை மேற்க்கொள்ளவும், எல்லாம் வல்ல நம் இறைவன் நமது பாவங்களை மன்னித்து நம்மை  ஆசீர்வதிக்கவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,*

இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக  இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*ஆமென்.*

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL