Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
858
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH SEPTEMBER 21, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

PRAY THE ROSARY

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

(திங்கள்)
PRAY THE ROSARY

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், "நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்." எனக் கூறப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் கூறியதைப் போல நாம் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப நாம் வாழ வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை   சந்தித்ததைத் தியானித்து, 

இன்று நற்செய்தியாளர் புனித மத்தேயுவின்
விழாவினைக் கொண்டாடும் நாம், மனம் மாறிய மத்தேயுவைப் போல நாமும் முழுமையாக மனம் மாற வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


3.  குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
"இயேசு "என்னைப் பின்பற்றி வா'' என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்" என வாசித்தோம்.

இயேசு நம்மை அழைத்தால், மத்தேயுவைப் போல அனைத்தையும் விட்டு விட்டு இயேசுவைப் பின்தொடர நாம் தயாராக இருக்கின்றோமா? என சிந்திக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

திருத்தூதர் மத்தேயு எழுதிய நற்செய்தி நூல் 'இறையாட்சி நூல்' என்றும்  அழைக்கப்படுகிறது. காரணம் இறையாட்சி என்ற வார்த்தையானது பலமுறை வருகிறது. 

இறைவனின் இறையாட்சியில் நாம் அனைவரும் பங்கு கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,

தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை  விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.🙏

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL