1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில் "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்." என்று கூறப்பட்டுள்ளது.
வாழ்வின் துன்பங்களின் நிமித்தம் உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்து இருக்கும் எண்ணற்ற மக்களுக்கு ஆண்டவர் அண்மையில் இருந்து ஆறுதல் அளித்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
"இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
ஆண்டவரின் மீது அதிக அளவு அன்பு கொள்வோம். அத்தகைய அளப்பரிய அன்பின் மூலமும், தவறுகளை உணர்வதன் மூலமும் நமது பாவங்களைக் கழுவ வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இயேசு சபைத் துறவியும், மறைவல்லுனரும், இன்றையப் புனிதருமான புனித இராபர்ட் பெல்லார்மின் ஆலய வேதியர்களின் பாதுகாவலராவார்.
நமது திருச்சபையில் ஆலயங்களில் பணிபுரியும் எண்ணற்ற வேதியர்களின் உடல், உள்ள ஆரோக்கியத்துக்காக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இந்த ஆண்டு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தேவையான நல்ல பருவ மழையை இறைவன் நமக்குத் தந்தருள வேண்டி நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
?>
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.