Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
831
CLIENT
STORIES
BLOG SEPTEMBER 26, 2019 2 MIN READ 222 VIEWS 40 Likes FOLLOWING ACTIVE

நம் பாரம்பரியத்தை நினைவுகூரும் தொடக்க ஜெபம் எல்லா நன்மைகளுக...

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
நம் பாரம்பரியத்தை நினைவுகூரும் தொடக்க ஜெபம் எல்லா நன்மைகளுக்கும் ஊற்றாகிய எல்லாம் வல்ல இறைவா! எங்கள் முன்னோர்கள் தங்களின் வாழ்வால் எங்களுக்குக் கொடுத்த விசுவாசம், அன்பு, தியாகம், சேவை மற்றும் நன்னெறிக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ​அவர்களின் வழியில் நாங்கள் வழிவழியாகப் பேணி காத்து வரும் இந்த உன்னதமான பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் நினைவு கூரும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளுக்காக உமக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம். ​இறைவா, இந்த நன்னாளின் தொடக்கத்தில் உம்மை வணங்கிப் போற்றுகிறோம். எங்கள் முன்னோர்களின் உயர்ந்த பண்புகளையும், நம்பிக்கையையும், இறைபற்றையும் நினைவுகூரும் இந்த வேளையில், அவர்களின் நல்ல முன்மாதிரிகளை எங்கள் வாழ்விலும் பின்பற்ற அருள் புரிவீராக. எங்கள் பாரம்பரியத்தின் மேன்மையையும், வாழ்வியல் விழுமியங்களையும் நாங்கள் அறிந்து கொள்ளவும், அவற்றை அடுத்த தலைமுறைக்கு அன்போடும் பெருமிதத்தோடும் கொண்டு சேர்க்கவும் தேவையான  ஞானத்தையும் துணிவையும் ஆற்றலையும் எங்களுக்குத் தந்தருளும். இந்தக் கலந்துரையாடல் பயனுள்ளதாகவும், எங்கள் எண்ணங்களும் செயல்களும் உமது திருவுளத்தின்படி அமையவும், உமது தூய ஆவியானவர் எங்களை வழிநடத்துவாராக. அன்பும் அருளும் நிறைந்த அம்மா மரியே!,  உமது தாய்மையின் பாதுகாப்பில் எங்களை ஒப்படைக்கிறோம். எங்கள் அனைவரையும் உமது தாய்மையின் போர்வையில் காத்தருளும். எங்கள் சிந்தனை, உரையாடல், மற்றும் செயல்கள் அனைத்தும் இறைவனின் திருவுளத்தின்படி அமையச் செய்தருளும். HYMN அன்னை மரியாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE40 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL