Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
877
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 07, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

OUR LADY OF ROSARY

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
OUR LADY OF ROSARY

அக்டோபர் 7ம் நாளாகிய இன்று அகில உலகமெங்கும் உள்ள புனித கத்தோலிக்கர்கள்
 *புனித ஜெபமாலை அன்னை* 
நினைவு நாளை கொண்டாடி சிறப்பிக்கின்றனர். 

புனித செபமாலை அன்னை (Our Lady of the Rosary) என்ற பெயர், கத்தோலிக்க திருச்சபையின் பக்தி முயற்சிகளில் ஒன்றாகிய ஜெபமாலையின் அன்னை என்ற அடிப்படையில் அன்னை மரியாளுக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். 

13ம் நூற்றாண்டில், *ஆல்பிஜென்சிய பேதகம்* கிறிஸ்தவர்களின் விசுவாசத்தில் தளர்ச்சியை உருவாக்கும் விதத்தில் தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்தது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க உதவுமாறு, *புனித தோமினிக்* அன்னை மரியாளிடம் வேண்டினார். 1208 ஆம் ஆண்டு முரே என்ற இடத்தில் அன்னை அவர்கள் தோன்றி, "ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை தியானித்தவாறே, மங்கள வார்த்தை ஜெபங்களை ஜெபிக்கும் ஜெபமாலை பக்தி முயற்சியை மக்களிடையே பரப்பினால் ஆல்பிஜென்சிய பேதகம் மறைந்துவிடும்" என்று கூறி மறைந்தார். அதன்படி, புனித டோமினிக் ஜெபமாலை பக்தியை கிறிஸ்தவர்களிடையே பரப்பியதால், மக்களிடையே பரவியிருந்த விசுவாசத்தை குழைக்கும் தவறான கருத்துகள் அனைத்தும் மறைந்தன.

பின் 1571ல் துருக்கியர்களுக்கு எதிரான *லெப்பன்டோ கடற்போரில்* கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக, திருத்தந்தை 5ம் பயஸ் *வெற்றியின் அன்னை*' விழாவை *(Our Lady of Victory)* ஏற்படுத்தினார். அந்த வெற்றி, அன்னை மரியாளின் உதவியை வேண்டி, வத்திக்கான் புனித பேதுரு பேராலய சதுக்கத்தில் கூடிய கிறிஸ்தவர்கள் ஜெபித்த தொடர் ஜெபமாலையின் விளைவாக கிடைத்ததாக நம்பப்படுகிறது.

1573ல், திருத்தந்தை 13ம் கிரகோரி இவ்விழாவின் பெயரை 'திருச்செபமாலையின் விழா' என்று மாற்றினார். இந்த விழாவை உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர்கள்  அனைவரும் அக்டோபர் முதல் ஞாயிறு அன்று கொண்டாடும் வகையில், 1716 ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் கிளமென்ட் இதை ரோமை பொது நாள்காட்டியில் சேர்த்தார்.

1913 ல் பாத்திமா நகரில் காட்சி அளித்த அன்னை, தன்னை *"ஜெபமாலை அன்னை"* என்று அறிமுகம் செய்து கொண்டார். அதே ஆண்டில் திருத்தந்தை 10ம் பயஸ், *ஞாயிறு திருவழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில்* இந்த விழாவை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு மாற்றினார்.

1969ல் திருத்தந்தை 6ம்  பால், இந்த விழாவின் பெயரை *ஜெபமாலை அன்னை விழா*' என்று மாற்றினார். இது தான் ஜெபமாலை மற்றும் ஜெபமாலை அன்னை விழா வரலாறு.

ஜெபமாலை, திருச்சபையால் ஊக்கப்படுத்தபடுவதும்,பல புனிதர்களால் அன்பு செய்யப்பட்டதுமான பாரம்பரிய வாய்மொழி ஜெபமாக இருக்கிறது. திருத்தந்தை
புனித 2ம் ஜான் பால்  "மரியாளின் ஜெபமாலை''  என்ற அப்போஸ்தலிக்க கடிதம் எழுதியுள்ளார். அதில் கிறிஸ்தவ வழிகாட்டும் ஒரு *“புனிதத்தில் உண்மையான பயிற்சி”* என ஜெபமாலைப் பக்தியை  சுட்டிக்காட்டுகிறார். ஜெபமாலை ஆன்மீகப் போரின் ஒரு தனிப்பட்ட ஆயுதமாக இருக்கின்றது. மேலும்
உலக அமைதிக்காகவும் குடும்ப வாழ்வின் புனிதத்தையும், மாண்பையும் காப்பாற்றவும் நாம் ஜெபமாலை ஜெபிப்பது தேவையாய் இருக்கிறது.இது அக்கறையின்றி உணராமல் செய்யும் ஜெபம் அல்ல. மாறாக நமது அன்னையும் கிறஸ்துவின் அன்னையும் ஆண்டவரின் கண்களால் கிறிஸ்துவை உற்றுநோக்கும் ஒரு ஜெபமாக இருக்கிறது.

ஒரே ஒரு புதுமையை மட்டும் அறிந்து கொள்வோம். இரண்டாம் உலகப் போர் முடிவில் 1945ம் ஆண்டு  ஆகஸ்ட் 6ம் தேதி, *"சின்னப் பையன்" ( Little Boy) என்ற அணுகுண்டை* ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா வீசியது. அதன் விளைவாக சுமார் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது அந்த நகரின் மையத்தில், குண்டு வீசப்பட்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலயமும், அதனோடு இணைந்திருந்த இயேசு சபை இல்லமும் மட்டும் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து *தப்பின.* அந்த இல்லத்தில் இருந்த இயேசு சபை குருக்கள் அனைவரும் எந்த  தீங்கும்,காயமும் இன்றி உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய குருக்கள், "பாத்திமா அன்னையின்'' செய்தியின் படி வாழ்ந்ததால் தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று நம்புகிறோம்; தினமும் ஜெபமாலை ஜெபிக்கும் வழக்கமே எங்களைக் காப்பாற்றி இருக்கிறது" 
என்று ஜெபமாலை அன்னைக்கு சான்று பகர்ந்தனர்.

  ஜெபமாலையில் நாம், நம் ஆண்டவரின் பிறப்பு , வளர்ப்பு, நற்செய்தி போதிப்பு, பாடுகள், மரணம், உயிர்ப்பு  மற்றும் விண்னேற்றம்  முதலிய மறை உண்மைகளை தியானித்து, சிந்தனை செய்து ஜெபிக்கின்றோம். *இதில் மறை உண்மைகளை தியானித்தல்* மற்றும் *சிந்தனை செய்தல் தான் ஜெபமாலையை அர்த்தமுள்ளதாக்கும்.* ஆனால் நம் அன்னைக்கும், புனிதர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் *திருப்பலியின் மிகுந்த முக்கியத்துவத்தை மறந்துவிடக்கூடாது*. சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, ஜெபமாலை, திருப்பயணம்  இவைகள் அனைத்தும் பக்தி முயற்சிகளே. இவைகள் ஒரு போதும் *திருப்பலிக்கு இணையாகாது*. திருப்பலி ஒரு கல்வாரி பலி. திருப்பலி நமது வாழ்வு ஆகும். நாம் சோம்பியிருந்தால் சாத்தான் நம் ஆன்மாவை கெடுக்க பார்ப்பான்.(An idle mind is a devil's workshop).அத்தகைய நேரங்களில் நாம் சாத்தானுக்கு இடம் கொடுக்க கூடாது .அப்பொழுது நமக்கு உதவும்  ஒரு வலிமையான ஆயுதம்  ஜெபமாலை. நாம் பகத்தியுடன் சொல்லும் ஒவ்வொரு  "அருள் நிறைந்த" மந்திரமும் சாத்தான் தலையில் விழும் சம்மட்டி அடிதான்.எனவே ஜெபமாலை ஜெபிப்போம், ஜெயம் கொள்வோம்.

அனைவருக்கும் புனித ஜெபமாலை அன்னை நினைவு தின வாழ்த்துக்கள்.

புனித ஜெபமாலை அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL