Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
930
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH NOVEMBER 12, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

காலை ஜெபம் ,MORNING PRAYER

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
 *காலை ஜெபம் 
MORNING PRAYER

*திருப்பாடல் : 146

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். 

(திருப்பாடல் 146: 7-10)

 *ஜெபம்*

என்றும் வாழும் எங்கள் தந்தையே! இந்த அதிகாலை வேளையில் உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். நேற்றைய நாள் முழுவதும் எங்களைக் காத்து வழிநடத்திய உமது கிருபைக்காக நன்றி.

தந்தையே உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக. 

இறைவா, எங்கே பகைமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பையும், எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பையும் விதைத்திட அருள்புரியும். இதனால் இயேசுவே ! நீர் விதைத்த இறையாட்சி இப்பூவுலகெங்கும் செழித்து வளர்தோங்குக.
உமது இறையாட்சியில் நாங்கள் பங்கு கொள்ளும் பேற்றினை அளித்தமைக்கு நன்றி.

மீட்பின் தேவனே! இன்று விஷேசமாக, வாழ்ந்து மரித்த எங்கள் வாழ்வின் சிற்பிகளான எங்கள் ஆசிரியர்கள், ஞான வழிகாட்டிகள் ஆகியோரின் நித்திய இளைபாற்றிக்காக மன்றாடுகிறோம்.

இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றோம். நாங்கள் துவங்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

*ஆமென்.*


Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL