Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
913
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 27, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

*காலை ஜெபம் - MORNING PRAYER

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
 *காலை ஜெபம் - 
MORNING PRAYER

*திருப்பாடல் : 128*

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடி போல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக.

(திருப்பாடல் 128 : 1-5)

 *ஜெபம்*

மக்கள் பணிந்து தொழுதிடும் இறைவனே! உம்மை போற்றுகிறோம்.
வருங்காலத் தலைமுறையினருக்கும் இறைவனே! உம்மை போற்றுகிறோம்.
எங்களுக்கு புத்துயிர் அளிக்கும் இறைவனே!
உம்மை போற்றுகிறோம்.

இறைவா, இன்று விஷேசமாக குடும்பங்களில் கணவன், மனைவிக்காக பிராத்திக்கின்றேன். அனைத்துக் குடும்பங்களிலும் அன்பும், அமைதியும், சமாதானமும் என்றென்றும் நிலைபெற அருள் புரிவீராக.

விட்டுக் கொடுத்தல் என்ற உயரிய பண்பு தூய அன்பிலிருந்து மட்டுமே வருகிறது என்பதைக் கணவனும், மனைவியும் நன்கு உணர இறைவா உம்மை வேண்டுகிறேன்.

இயேசுவே, அன்று உமது திருக்குடும்பத்தில் எல்லாம்வல்ல தந்தைக்கு முக்கியத்துவம் அளித்து தந்தையின் திருவுளத்தை முழு மனதோடு ஏற்று அதன்படி வாழ்ந்ததைப் போல இக்காலத்திலும் குடும்பங்கள் அனைத்தும் சகலத்தையும் படைத்த இறைவனின் திருவுளப்படி நடக்க இறைவா ஆசீர்வதியும்.

இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

*ஆமென்.*


Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL