Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
906
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 24, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

*காலை ஜெபம் - MORNING PRAYER

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
 *காலை ஜெபம் -  
MORNING PRAYER
*திருப்பாடல் :  122* 

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும். ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர். இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றிசெலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். 

(திருப்பாடல் 122: 1-5)

 *ஜெபம்*

அனைத்துலகின் வேந்தரே! உம்மை போற்றுகிறேன். உம்மைப் புகழ்கிறேன். நன்றி கூறுகிறேன்.
இறைவா, உம் திருமுன் பணிந்து உம்மை ஆராதிக்கின்றேன்.

*"தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என் விருப்பம்"* என்று கூறிய எம் இயேசுவே!, உம் வழிகளை விட்டு விலகிய மக்களுக்காக செபிக்கிறோம். விரைவில் அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து உம் வழியில் திரும்ப அருள் புரிவீராக.

ஆண்டவரே, பாவிகள் மனம் மாற வேண்டும் என்ற உமது நீடித்த பொறுமையில் எங்கள் மீது நீர் கொண்ட எல்லையற்ற தூய அன்பு விளங்குகிறது.

தந்தையே! நான் இளம் பிராயத்தில் உம்மை முழுவதும் உணராமல், மனம் மாறாமல் உம்மைப் பாராமுகமாய் இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். *"என் பிள்ளை திருந்தும் ஓர் நாள்வரும்"* என என் மீது மிகுந்த நம்பிக்கையோடும், பொறுமையோடும், பேரன்போடும் எனக்காகக் காத்திருந்தீர். 
நன்றி அப்பா.. 

இறைவா, மக்கள் மனம் மாறுவதற்குக் காலம் தாழ்த்திக் கொண்டிருக்காமல், இன்றே மீட்பு நாள் என்பதை உணர்ந்து, மனம் மாறி, உமது  இறையருளை நிறைவாகப் பெற நான் பிராத்திக்கின்றேன்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

*ஆமென்.*


Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL