Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
902
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 23, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

காலை ஜெபம் , MORNING PRAYER

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
*காலை ஜெபம் 
MORNING PRAYER

*திருப்பாடல் : 24*

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. 

(திருப்பாடல் 24:1-6)

  *ஜெபம்* 

ஆண்டவரே, நான் விழித்தெழும்போது, உம்மைப் போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். ஆராதிக்கிறேன். உம்மை நோக்கி செபிக்கும் இவ்வேளையில் உம் அருகாமையை நான் உணர்கிறேன். உம் பிரசன்னம் கண்டு நிறைவு பெறுகிறேன்.

இறைவா, உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.

இனிய இயேசுவே, நாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழவும், முழுமனத் தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ளவும் அருள் புரிவீராக.

இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

*ஆமென்.*


Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL