Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
896
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 22, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

காலை ஜெபம்*,MORNING PRAYER

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
*காலை ஜெபம்*
MORNING PRAYER

*தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.*

*அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது.*

*மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள்.*

*அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.*

*ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.*

*அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.*

(திருப்பாடல்கள் 103:13-18)

*அணுக முடியாத ஒளியில் வாழும் இறைவா! இந்த காலை வேலையிலே உம்மை போற்றுகிறோம், புகழுகிறோம்,  வாழ்த்துகிறோம், வணங்குகிறோம், ஆராதிக்கின்றோம், மகிமைப்படுத்துகின்றோம்.*

*இந்த நேரம் வரை எங்களை வழி நடத்தி வந்த உமது இரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.*

*தூய்மையின் பிறப்பிடமே இறைவா! நாங்கள் பாவத்திலிருந்து மீட்பு பெற்று தூய்மையான நிலையில் உம்மிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காகவே நீர் பாடுகள்பட்டீர். ஆனால் நாங்கள் எங்களின் இயலாமையினால் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகிறோம்.* 

*ஆண்டவரே! எங்கள் உடல் ஒரு நாளும் பாவத்திற்கு இடம் கொடாதவாறும், எங்கள் உடல் ஒரு நாளும் பாவத்திற்கு துணை போகாதவாரும், நீர் உமது தூதரை அனுப்பி எங்களை காத்தருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சு மன்றாடுகிறோம்.*

*இவ்வாறு நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும், சாத்தானுக்கு இடம் கொடாமலும், அவனது தீய வலையில் விழாமலும் காப்பாற்றப் படுவோமாக! இதுவிதமே நாங்கள் உமது பிள்ளைகளாக, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக வாழும் வரம்தர வேண்டும் என்று...*

*இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.*

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL