நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
(திருப்பாடல் 33: 1-2. 4-5. 11-12. 18-19)
*ஜெபம்*
அப்பா, தந்தையே! அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகிறேன். வாழ்த்துகிறேன். ஆராதிக்கின்றேன். நன்றி செலுத்துகின்றேன். இன்றைய நாளில் உமது திருச்சட்டத்திலிருந்து நான் விலகாதிருக்க அருள் புரியும்.
இறைவா, தூய அன்பே என் வாழ்வில் ஆணிவேரும் அடித்தளமுமாய் இருக்க அருள் புரிவீராக. இயேசுவே, இவ்வுலகில் நீர் அன்புத் தீயை மூட்ட வந்தீர். அந்த அன்புத் தீ நீர் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் வழியாக உலகமெங்கும் பரவுவதாக ! பற்றி எரிந்து பரவும் அந்த அன்புத்தீ எண்ணற்ற பாவங்களைக் குறைப்பதாக ! இயேசுவே, உமது அன்புத் தீயை பரப்பும் சிறு துரும்பாக இருக்க என்னையும் ஆசீர்வதித்தருளும்.
இறைவா, இந்த புதிய நாளை, உமது பெயரால் துவக்குகின்றேன். தூய ஆவியின் துணை கொண்டு என்னைக் காத்து வழி நடத்தியருளும். என் இறுதி மூச்சு வரை உம் பிள்ளையாக, உம் அன்பில் என்றும் நிலைத்திருக்க வரம் தாரும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.