ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும், பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
(திருப்பாடல் 23 : 1-6)
*ஜெபம்*
எங்கள் துன்ப துகிலை தூக்கி எறிபவரே! சிறந்ததொரு விருந்தினை எங்களுக்கு ஏற்பாடு செய்பவரே! என்றுமே இல்லாதவாறு எங்கள் மத்தியில் சாவை ஒழிக்க வருபவரே! இந்த காலை வேளையில் நீர் படைத்த படைப்பு அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகிறோம். உம்மைத் துதிக்கிறோம். உம்மை ஆராதிக்கின்றோம். உமக்கு நன்றி கூறுகிறோம்.
இறைவா, எங்களுக்கு இன்று நீர் அளித்த இந்த ஓய்வு நாளை ஆசிர்வதியும்! இன்றையத் திருப்பலியில் உமது இறைவார்த்தைகளை உன்னிப்பாகக் கேட்க, தியானிக்க, அதன்படி நடக்க ஏற்ற சூழலை உருவாக்கியருளும்.
திருப்பலியில் இன்று நாங்கள் மனம் ஒருமித்து முழுமையாக பங்கு கொள்ளவும், உமது வார்த்தைகள் எங்களுள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தவும் ஆசீர்வதிப்பீராக.
இயேசுவே! இன்று திருப்பலியில் உமது திருவுடலை பெறும் கிறித்துவர்கள் அனைவருக்கும் நல்ல உடல் உள்ள சுகத்தினைத் தந்தருளும்.
இயேசுவே! எங்களுக்கு வலுவூட்டுகிறவராகிய உமது துணைகொண்டு, எதையும் செய்ய எங்களுக்கு ஆற்றல் உண்டு என்பதை நாங்கள் முழுமையாக விசுவசிக்க அருள் புரிவீராக.
இறைவா பிறந்த இப்புதிய வாரத்தில் நாங்கள் உமது மதிப்பீடுகளின்படி வாழ்ந்து உம்மையே அணிந்து கொண்டு உம்மைப் போல ஒளிர எங்களை ஆசீர்வதிப்பீராக.
இறைவா, இன்றைய ஓய்வு நாளை நாங்கள் உமக்கு உகந்த முறையில் கழிக்கவும், உம் அன்பை பகிர்ந்தளிக்கும் அன்பின் கருவிகளாக விளங்கவும் அருள்புரிவீராக!
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.