ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங் கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.
‘புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம். ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன். உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.
(திருப்பாடல் 27: 7-8a. 8b-9abc. 13-14)
*ஜெபம்*
எங்கள் வாழ்வுதரும் ஊற்றே! உம் பேரின்ப ஓடையில் எங்கள் தாகம் தணிப்பவரே! எங்கள் மீட்பின் பிறப்பிடமே! இந்த காலை வேளையில் உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதனை செய்கிறேன்.
இறைவா! கடந்த மாதம் முழுவதும் எங்களை உம் சிறகுகளில் அரவணைத்து காத்துவரும் உமது மேலான கிருபைக்காக நன்றி. 🙏
இறைவா! சிறிதளவும் விலகாது உம் பாதையில், உம் வழி நடந்தால் எதற்கும் எவருக்கும், எப்போதும் அஞ்சத் தேவையில்லை. ஆன்மாவைக் கொல்ல இயலாதவர்களுக்காக ஒரு போதும் பயப்படத் தேவையில்லை. அகில உலகையும் படைத்த உமக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். ஆனால் இந்த உண்மையை நான் உணர்ந்திருந்தும், நீர் என்னோடு எப்போதும் இருக்கிறீர் என்பதை அறிந்திருந்தும் அலகை வருவித்த தேவையற்ற அச்சத்தின் பிடியில் ஆட்கொண்டு நிம்மதி தொலைத்து நான் பெரும் கவலையுற்று இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.
ஏனெனில் இறைவா நீர் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே எனக்கு வழங்கியுள்ளீர்.
இயேசுவே! இன்று விஷேசமாக கத்தோலிக்க குடும்பங்களில் இறை அழைத்தல் பெருக உம்மை வேண்டுகிறோம். ஏனெனில் *"“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்"* என நீர் கூறி இருக்கிறீர்.
*"ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்."* என்று கூறிய இயேசுவே! புதிய இடம், புதிய சூழல், பிரச்சனைக்குரிய இடம் ஆகியவற்றில் பணி செய்து கொண்டிருக்கும் இறைப்பணியாளர்கள் மற்றும் உமது இறைமக்களை ஆசீர்வதித்து வழிநடத்தும். தூய ஆவியானவர் அவர்களுக்கு நல்ல ஞானத்தையும், நாவன்மையையும், மனத்துணிவினையும் தந்தருள வேண்டுகிறேன்.
இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்தும்.
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.