Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
869
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH SEPTEMBER 26, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

MORNING PRAYER

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME

MORNING PRAYER
*காலை ஜெபம் 

*திருப்பாடல் : 90*

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர். ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்.

(திருப்பாடல் 90: 3-6. 12-14,17)

  *ஜெபம்* 

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! விடுதலை அளிப்பவரே! விரும்பிக் கேட்பவற்றைக் கொடுப்பவரே! உம்மைப் போற்றுகிறேன்.  உம்மைப் புகழ்கின்றேன். நன்றி கூறுகின்றேன்.

இந்த காலை வேளையில் உம்மை நினைப்பது, உம்மை செபிப்பது, உம்மை போற்றுவது மனதுக்கு நிறைவினையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

என் தலைவரே! எங்கள் தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.  எங்கள் கடவுளாம் தலைவர் உமது இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றியைத் தாரும். ஆம், வெற்றியைத் தாரும்.

இறைவா, இன்று விஷேசமாக இளைஞர்களுக்காக பிராத்திக்கிறேன்.

 'கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பும்முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை' என்ற உமது இறைவார்த்தை அவர்களது உள்ளத்தில் ஆழப் பதிய வேண்டுகிறேன். 'உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே' என்ற வார்த்தைக்கிணங்க இளம்பிராயத்திலேயே அவர்கள் உம்மைத் தேடி நாட வேண்டுகிறேன்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL