"மாசற்றவராய் நடப்போரே! இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்".
(திருப்பாடல் 15: 2-5)
கண்ணீரோடு விதைப்பவர்களுக்கு, அக்களிப்பின் அறுவடையை ஆசீராக அளிக்கும் எங்கள் ஆண்டவரே! இந்த காலை வேளையில், உம்மை நன்றியோடு ஆராதிக்கின்றேன். உமக்கு நன்றி கூறுகின்றேன். என்னுடைய தாய் என்னைக் கருவில் சுமந்த நாள் முதல், இந்நாள்வரை என்னைக் காத்து, வழிநடத்தி வரும் என் அன்பு தெய்வமே உமது மேலான அன்பிற்காக நன்றி அப்பா.
" நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்;" என்று கூறிய என் ஆண்டவரே! நீர் என்னை அழைத்த, கதவைத் தட்டிய தருணங்களில் நான் அறியாது, உணராது உலக நாட்டங்களில் உழன்று கிடந்தேன். மன்னிப்பின் தேவனே, மனமிரங்கி என்னை மன்னித்தருளும்.
இறைவா! என் இதய வாசல் நீர் வாசம் செய்ய திறந்தே உள்ளது. நீர் என்றென்றும் குடிகொள்ள ஏற்ற வகையில், என் உடலை தூய ஆலயமாக மாற்றியருளும்.
இறைவா! இன்று மனம்மாற விரும்பும் எண்ணற்ற மக்களுக்காக செபிக்கிறேன். மனம் மாறிய சக்கேயு கண்ட, ஒளிமிக்க புதிய வாழ்வை அவர்களுக்கும் வழங்கும்.
இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.