வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.
(திருப்பாடல் 19: 1-4)
ஜெபம்
என்றும் வாழும் எல்லாம் வல்ல எம் தந்தையே! உம்மை வாழ்த்தி, போற்றி, ஆராதித்து வணங்குகிறேன். எம் இறைவா, உமது படைப்புகள் அனைத்துமே திருத்தூதர்களின் அருளணியோடு சேர்ந்து உம்மை வாழ்த்தி போற்றுகின்றன.
உம் பிள்ளைகளாகிய எம்மை கண்ணின் மணி போல் காத்திடும். அலகையின் சூழ்ச்சிகளில் இருந்தும், ஆபத்துக்களில் இருந்தும் எங்களை விடுவியும்.
சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவை நோக்கி 'என்னைப் பின்பற்றி வா' என்று அழைத்த எம் இனிய இயேசுவே! நீர் எங்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்திருக்கிறீர். உமது அழைப்பை நாங்கள் உணர்ந்தவர்களாய் உமது வழியில் பின்தொடர உம்மோடு பயணிக்க அருள் புரிவீராக. இறைவா! புனித மத்தேயூவைப் போல நாங்களும் உமது இறைத்திட்டத்தை நிறைவேற்றும் கருவிகளாக எங்களை மாற்றியருளும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.