நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
(திருப்பாடல் 145: 2-3. 8-9. 17-18)
*ஜெபம்
என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு. ஆற்றல் அனைத்தும் கொண்ட என்னைப் படைத்தவரை புகழ்ந்திடு. அதிகாலையில் என்னை தட்டி எழுப்பும் என் அன்பரை வணங்கிடு. ஆறுதல் அளித்து அரவணைக்கும் என் தந்தையை வாழ்த்திடு.
அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில் நீர் படைத்த படைப்பு அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகிறேன். துதிக்கிறேன். ஆராதிக்கின்றேன்.
இறைவா, எங்களுக்கு இன்று நீர் அளித்த இந்த ஓய்வு நாளை ஆசிர்வதியும்! இன்றையத் திருப்பலியில் உமது இறைவார்த்தைகளை உன்னிப்பாகக் கேட்க, தியானிக்க, அதன்படி நடக்க ஏற்ற சூழலை உருவாக்கியருளும்.
திருப்பலியில் இன்று நான் மனம் ஒருமித்து பங்கு கொள்ளவும், உமது வார்த்தைகள் என்னுள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தவும் ஆசீர்வதிப்பீராக.
இயேசுவே! இன்று திருப்பலியில் உமது திருவுடலை பெறும் கிறித்துவர்கள் அனைவருக்கும் நல்ல உடல் உள்ள சுகத்தினைத் தந்தருளும்.
இயேசுவே! நாங்கள் உமது மதிப்பீடுகளின்படி வாழ்ந்து உம்மையே அணிந்து கொண்டு உம்மைப் போல ஒளிர எங்களை ஆசீர்வதிப்பீராக.
இறைவா, இன்றைய ஓய்வு நாளை நான் உமக்கு உகந்த முறையில் கழிக்கவும், உம் அன்பை பகிர்ந்தளிக்கும் அன்பின் கருவியாக விளங்கவும் அருள்புரிவீராக!
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.