Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
843
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH SEPTEMBER 09, 2026 2 MIN READ 1 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

MORNING PRAYER

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
MORNING PRAYER
காலை ஜெபம் 

திருப்பாடல் : 45

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள். பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர்.

(திருப்பாடல் 45: 10-11. 13-16)

ஜெபம்

மக்கள் பணிந்து தொழுதிடும் இறைவனே! உம்மை போற்றுகிறோம்.
வருங்காலத் தலைமுறையினருக்கும் இறைவனே! உம்மை போற்றுகிறோம்.
எங்களுக்கு புத்துயிர் அளிக்கும் இறைவனே!
உம்மை போற்றுகிறோம்.

இறைவா இந்த காலை வேளையில் உம்மை நோக்கி செபிப்பது, உம்மை போற்றுவது, உம்மை துதிப்பது மனதிற்கு நிறைவையும், மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகிறது. நன்றி இறைவா!

ஏனெனில் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவரே  நீர் அண்மையில் இருக்கிறீர்.

விண்ணகத்தில் இறையாட்சியை சுவீகரித்துக் கொள்ள இருக்கும் ஏழைகளுக்கு மண்ணகத்தில் வாழும் காலத்திலேயே தகுந்த உதவிகளை நான் செய்ய நல்ல வாய்ப்பினைத் தந்தருளும். அவ்வாறே விண்ணகத்தில் நிறைவினைக் காண இருக்கும் பட்டினியில் இருப்போரை நான் மண்ணகத்தில் இனம் கண்டு அவர்களது பசியினைப் போக்க அருள் புரிவீராக.

இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.


ஆமென். 
?>

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL