Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
831
CLIENT
STORIES
BLOG SEPTEMBER 26, 2019 2 MIN READ 166 VIEWS 11 Likes FOLLOWING ACTIVE

MORNING PRAYER

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
***MORNING PRAYER*** "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?" என்று வியந்தார்கள். (மத்தேயு 8;23-27) ❤️ தியானிப்போம்❤️ ✝️ என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மை மிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர். வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். ✝️ நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்! காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர். தீப்பிழம்புகளை உம் பணியாளராய் கொண்டுள்ளவர். ✝️ நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின் மீது நிலை நாட்டினீர்.அது என்றென்றும் அசைவுறாது. அதனை ஆழ்கடல் ஆடையென மூடி இருந்தது. மலைகளுக்கும் மேலாக நீர் திரள் நின்றது. நீவிர் கண்டிக்கவே அது விலகி ஓடியது; நீவிர் இடியென முழங்க அது திகைப்புற்று ஓடியது.(திபா104) ✝️❤️ புதிய மாதம் கடவுளின் கருணை. அவரது ஞானம் வியப்புக்குரியது, நம் அறிவுக்கு எட்டாதது. மாட்சிமை மிகுந்த அவரது மேன்மைக்கு பணிந்து, எல்லையற்ற அவரது கருணையை புகழ்ந்து வணங்கி ஆராதித்து நல்வாழ்வை சுத்திகரித்துக் கொள்வோம். 🙏 ஜெபம் 🙏 ✝️🧎‍♀️ என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு! +🧎‍♀️ ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. +🧎‍♀️ தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பி இருக்கின்றன. நீர் கொடுக்க அவை சேகரித்துக் கொள்கின்றன. நீர் உமது கையை திறக்க அவை நலன்களால் நிறைவுறுகின்றன. +🧎‍♀️ நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரை போற்றி பாடுவேன்; என் உயிர் உள்ள வரையிலும் என் கடவுளுக்கு புகழ் சாற்றிடுவேன். +🧎‍♀️ என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக. நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.(திபா104) ஆமென் அல்லேலூயா.. 🙏 இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏 🌹 மரியே வாழ்க🌹

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE11 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL