Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
831
CLIENT
STORIES
BLOG SEPTEMBER 26, 2019 2 MIN READ 164 VIEWS 13 Likes FOLLOWING ACTIVE

MORNING PRAYER

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
***MORNING PRAYER*** இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம் இயேசுவின் திருஇருதயமே ! கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே ! எங்கள் குடும்பங்களில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் .தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திருஇருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் எவனாவது உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால் அவன் குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவனுக்கு கிருபை செய்தருளும். இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், ஊனமுற்றோர்களுக்கு ஊன்றுகோலும் ,விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்து காத்திருப்பீராக. இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே ! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தரே, இந்த ஊரில் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும், அவர்களுடைய திருஇருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வபயத்தையும் வளரச் செய்யும். சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும், மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே !முறைமுறையாய் உமது திரு சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும் . ஆமென்.🙏

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE13 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL