Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
946
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH NOVEMBER 26, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

*காலை ஜெபம் -

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
 *காலை ஜெபம்  - 

*திருப்பாடல் : 100*

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். 

(திருப்பாடல் 100 :1-5)

  *ஜெபம்* 

எங்கள் வாழ்வுதரும் ஊற்றே! உம் பேரின்ப ஓடையில் எங்கள் தாகம் தணிப்பவரே! எங்கள் மீட்பின் பிறப்பிடமே! இந்த காலை வேளையில் உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றோம். 

இறைவா! இன்றுவரை என்னை உம் சிறகுகளில் அரவணைத்து காத்துவரும் உம் மேலான கிருபைக்காக நன்றி. 

மீட்பின் தேவனே! உமது இரண்டாவது வருகையை மறந்து, அதை எதிர்நோக்காது, அதற்காக என்னையே நான் தயார்படுத்திக் கொள்ளாமல் கடந்த காலங்களில் நான் அறிவிலியாக இருந்ததற்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி என்னை மன்னித்தருளும்.

உமது வருகையை தினம் தினம் ஆவலோடு எதிர்கொள்ளும் வகையில் அதற்கு ஏற்றபடி,  முன் மதியுள்ள பெண்டிரின் மன நிலையை எனக்குத் தந்தருளும்.

இரக்கத்தின் இறைவா, செம்மறியின் விருந்திற்கு அழைக்கப்படும் மாபெரும் பேற்றினை எனக்கும் அளித்தருளும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

*ஆமென்.*

 

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL