*புனித பேதுரு* மற்றும் *புனித பவுல் பசிலிக்காக்களின் அர்ப்பணிப்பு நினைவு நாள்*
இறை இயேசுவில் அன்பான சகோதர சகோதரிகளே!
நவம்பர் 18ம் நாளாகிய இன்று, தாய் திருச்சபை *புனித பேதுரு* மற்றும் *புனித பவுல் பசிலிக்காக்களின் அர்ப்பணிப்பு நினைவு நாளை*
அல்லது
*அருட்கன்னியான* பிலிப்பைன் நகர் புனித ரோஸ்*
என்ற புனிதையின் விழா நாள் நினைவை (விருப்ப) *நினைவு திருப்பலி* கொண்டாடி சிறப்பிக்க அழைக்கின்றது.
*பிலிப்பைன் நகர் புனித ரோஸ்* பிரான்ஸ் நாட்டு அருட்கன்னியும் கல்வியாளரும் ஆவார். நம் புனிதையை 1988ம் ஆண்டு திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் புனிதராக அறிவித்து சிறப்பு செய்தார். 1769ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் நாள் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நம் புனிதை ஒரு மிஷனரியாக அமெரிக்காவிற்கு சென்று United States Indian Removal நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் பால் எடுத்து கொண்ட கரிசனை மற்றும் அவர்களுக்கு கல்வி வழங்கியது இவைகளுக்காக வந்திக்கப்படுகின்றார். பிறிதொரு நாளில் புனிதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ரோமையில்,
*1.லாத்தரன் பேராலயம்**2.புனித பேதுரு பேராலயம்.*
*3.புனித பவுல் பேராலயம்.**4.புனித மேரி மேஜர் பேராலயம்.*
என்ற நான்கு *பேராலயங்கள் (Basilicas)* இருக்கின்றன என்பதையும், தொடக்ககால கிறிஸ்தவர்கள், ஆலய அர்ப்பணிப்பு விழாவை கொண்டாடி சிறப்பு செய்தார்கள் என்பதையும் அவ்விழா அந்த *ஆலயத்தின் பிறந்த நாள்* ஆகும் என்பதையும், மேற்ச்சொன்ன இந்த நான்கு பேரலாயங்களுக்கும் அர்ப்பணிப்பு விழாக்கள் தனித்தனியே உண்டு என்பதையும் முன்பே அறிந்து கொண்டோம்.
அந்த வகையில் *இன்று*
*புனித பேதுரு பேராலயம்.* மற்றும்
*புனித பவுல் பேராலயம்.* அர்ப்பணிப்பு நினைவு நாளை கொண்டாடுகின்றோம்.
ஜூன் 29ம் நாள், நாம் இந்த இரண்டு திருத்தூதர்களின் *மறைசாட்சியத்தை* ஒன்றாக இணைந்து பெருவிழாவாக கொண்டாடி சிறப்பித்தோம்.
*நவம்பர் 9ம் நாள் லாத்தரன் பேராலய அர்ப்பணிப்பு நாளை கொண்டாடினோம்*. அதுபோல் இன்று இவர்களை மகிமைப்படுத்த கட்டப்பட்ட பேரலாயங்களின் அர்ப்பணிப்பு நாளை ஒன்றாக இணைந்து கொண்டாடுகின்றோம். இவர்கள் இருவரும் கத்தோலிக்க திருச்சபையின் இரு பெரும் தூண்கள். எனவே ஒன்றாக இணைந்து கொண்டாடப்படுகிறது.
*புனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica)*
என்பது *வத்திக்கான் நகரத்தில்* அமைந்துள்ள தலை சிறந்த ரோமன் கத்தோலிக்க வழிபாட்டு இடம் ஆகும். இப்பெருங்கோவில் கலை அழகு மிகுந்த எழில்மிகு இடம் ஆகும். உலகிலுள்ள கிறிஸ்த்தவ கோவில்களுக்கெல்லாம் மிக அதிகமான உட்பரப்பு கொண்ட கோவில் இதுவே. கத்தோலிக்க கிறித்தவ உலகில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு. இங்கு தான் அனைத்து வழிபாடுகளும் நடக்கின்றன
புனித பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். அப்பொழுது அவர் உடல் ரோமையில் உள்ள ஒரு குன்றில் அடக்கம் செய்யப்பட்டது. இறைமக்கள் இவரின் கல்லறைக்கு சென்று வணக்கம் செலுத்தி வந்தனர். 76-78ல் திருதந்தை புனித கிளிற்றஸ் இக்கல்லறையின் மீது ஒரு நினைவுத்தளம் கட்டினார். பின் 319ம் ஆண்டு வாக்கில் *பேரரசர் மாண்புமிகு கான்ஸ்டன்டைன் அவர்கள்* இக்கல்லறை மீது ஒரு பிரமாண்டமான ஆலயம் கட்டி பேதுருவுக்கு அர்ப்பணித்து மக்கள் வணக்கம் செலுத்த ஆவண செய்தார். தற்போது உள்ள கட்டிடம், திருதந்தை இரண்டாம் ஜூலியஸால் 1506ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 120 ஆண்டுகளாக கட்டப்பட்டு 1626ல் முடிவு பெற்று நவம்பர் 18ம் தேதி திருதந்தை *எட்டாம் உர்பனால்* அர்ப்பணம் செய்யப்பட்டது. *இந்த அர்ப்பணிப்பு நாளைத் தான் இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகின்றோம்*.
இக்கோயிலின் பலிப்பீடத்திற்கு 100 மீட்டர் கீழே பேதுருவின் கல்லறை அமைந்துள்ளது. இங்கு மைக்கேல் ஆஞ்சலோவின் பிரமிக்க வைக்கும் ஓவியங்களை காணலாம்.
*புனித சின்னப்பர் என்று நாம் அன்போடு அழைக்கும் புனித பவுல்,* கொடுங்கோலன் நீரோ மன்னனால் தலை வெட்டப்பட்டு வேதசாட்சியாக மரித்தார். இவருடைய உடல் பேதுரு கல்லறையிலிருந்து ஏழு மைல் தொலைவில் இவர் இறந்த ஒபாதியா பாதையில் அப்பொழுது அடக்கம் செய்யப்பட்டது. திருத்தந்தை கிளிற்றஸ், அங்கு நினைவிடம் எழுப்பினார்.பின் *மாண்புமிகு பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்கள்* புனித பவுலுக்கு மரியாதை வணக்கம் செலுத்தும் விதத்தில் அங்கு ஒரு ஆலயம் எழுப்பினார். பிற்காலத்தில் இவ்வாலயம் பெரிய கிரிகோரி போன்ற திருதந்தையர்களால் புதிப்பிக்கப்பட்டது. பின் 1823ம் ஆண்டு கோயில் தீயில் எரிந்து தரைமட்டம் ஆனது. பின்னர் உலக மக்கள் கொடுத்த நிதி உதவியை கொண்டு இப்பொழுது இருக்கும் பசிலிக்கா புதிப்பிக்கப்பட்டது. இந்த பசிலிக்கா *வட்டிக்கன் நகருக்கு வெளியில்* இருப்பதால்,
*புனித பவுல் பசிலிக்கா, சுவர்களுக்கு வெளியே(St.Paul Basilica,out side the walls)* என்று அழைக்கப்படுகிறது. 1854ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி , அதாவது நம் தேவஅன்னை *"அமல உற்பவி"* என்று திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் பிரகனப்படுத்திய 2ம் நாள், இவ்வாலயம் இத்திருதந்தையால் *புனித பவுலுக்கு அர்பணிக்கப்பட்டது*.
புனித பவுல் ஜெருசலேமை விட்டு *வெளியே* சென்று புறவினத்தார்களுக்கு கிறிஸ்துவை போதித்தார். அதனால் என்னவோ இவரின் ஆலயம் ரோமைக்கு *,வெளியே* கட்டப்படலானது.
இவ்விரு புனிதர்களின் பேராலயங்களின் அர்ப்பணிப்பு நாளை நவம்பர் 18ம் தேதி ஒன்றாக நினைவு கூற திருச்சபை பணித்தது. அவ்வாறே, இன்று இந்த இரு பேராலயங்களின் அர்ப்பணிப்பு நினைவை கொண்டாடுகின்றோம்.
அன்பானவர்களே! இப்புனிதர்கள் இருவரும், நம் பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையின், இருபெரும் தூண்கள். இவ்விருவரின் நாட்களை ஒரே நாளில் கொண்டாடுவது, அவர்கள் திருச்சபைக்காக மறைசாட்சியாக மரித்தமைக்கு, நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.
நாம் எத்தனை கட்டிடங்களை கட்டி எழுப்பினோம் என்பது முக்கியமல்ல. மாறாக நாம் எத்தனை ஆன்மாக்களை கட்டி எழுப்பினோம் என்று தான் ஆண்டவர் கேட்பார். நாமே இறைவன் வாழும் உயிருள்ள ஆலயங்கள். எனவே,நாம் ஆன்மாக்களை கட்டி எழுப்புவோம்.
அனைவருக்கும் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பசிலிக்காக்களின் அர்ப்பணிப்பு மற்றும் பிலிப்பைன் நகர் புனித ரோஸ் நினைவு தின வாழ்த்துக்கள்.
பிலிப்பைன் நகர் புனித ரோஸே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
HAPPY MEMORIAL OF THE DEDICATION OF THE BASILICAS OF SAINTS PETER AND PAUL and ROSE OF PHILIPPINE, VIRGIN
LORD, HELP US TO BUILD UP SOULS
SAINT ROSE OF PHILIPPINE, PRAY FOR US
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.