Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
917
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 28, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*, *இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
*இன்றைய  செபமாலைக் கருத்துக்கள்.*
*இன்றைய  செபமாலைக் கருத்துக்கள்.*


*மகிமை நிறை மறையுண்மைகள்.*

*1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், *"கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்."* என புனித பவுலடியார் கூறுகிறார். 

தூய ஆவி வழியாக இறைவனின் உறைவிடமாக, ஆலயமாக நாம் கட்டப்பட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் இயேசு பன்னிரு திருத்தூதர்களையும் தேர்ந்தெடுப்பதற்கு முன் இரவு முழுவதும் இறைத்தந்தையிடம் வேண்டினார் என்பதை காண்கிறோம். நாம் நமது வாழ்வில் தினந்தோரும் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் முன்னர் இறைவனிடம் வேண்டுவோம். ஒவ்வொரு விடயத்திலும் இறைத்திட்டத்தை நாம் அறிய முற்பட தூய ஆவியின் துணையை நாடி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,*

தீவிரவாதி என அழைக்கப்பட்ட திருத்தூதர் சீமோன் ரம்பத்தால் அறுக்கப்பட்டு மறைசாட்சியாக மரித்தார். நாம் திருத்தூதர் சீமோனின் விழாவினைக் கொண்டாடும் இன்று, இயேசுவுக்காக துன்பங்களை ஏற்ற அவரது  உயரிய பண்பினை நாமும் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*4. தேவ மாதாவின் விண்ணேற்பைத் தியானித்து,*

கைவிடப்பட்டோர், அனாதைகள் போன்றோருக்குப் பாதுகாவலராக விளங்கும் திருத்தூதர் யூதா ததேயுவின் விழாவையும் இன்று கொண்டாடும் நாம், தனிமையில் வாடும் எண்ணற்ற மக்களுக்கு வாழ்வில் ஒளியும், நம்பிக்கையும் கிடைக்க வேண்டி இந்த நான்காவது  10 மணியை ஒப்புக் கொடுப்போம்.


*5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,*

புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*ஆமென்.*

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL