Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
891
CLIENT
STORIES
SPIRITUAL GROWTH OCTOBER 15, 2026 2 MIN READ 2 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

*அவிலாவின் புனித தெரேசா* ,

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
*அவிலாவின் புனித தெரேசா* 

அக்டோபர் 15ம் நாளாகிய இன்று தாய் திருச்சபை  *ஸ்பெயின் நாட்டை சேர்ந்த* 
*கார்மேல் சபை அருட் கன்னியும், மறைவல்லுநரும்* ஆன 

*அவிலாவின் புனித தெரேசா* 

என்ற புனிதையின் விழா நாள் நினைவை *நினைவு திருப்பலி* கொண்டாடி புனிதைக்கு தனது மேலான வணக்கத்தையும்,மரியாதையையும் செலுத்தி சிறப்பிக்கின்றது.

*புனிதையின் இந்த வரலாற்று சுருக்கத்தை, நான்கு சுவர்களுக்குள் இருந்து அல்லும், பகலும் நமக்காக ஜெபிக்கின்ற கார்மேல் சபை அருட்கன்னியர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்.*

நம் புனிதை  *இயேசுவின் புனித தெரேசா ( St.Teresa of Jesus)* என்றும் அழைக்கப்படுகிறார். இவர் நம் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். இவர் ஒரு *மெய்யியலாளரும், இறையியலாளரும்* ஆவார். சிலுவையின் புனித அருளப்பரோடு இணைந்து பெண்களுக்கான *கார்மேல் சபையை உருவாக்கினார்*. இவர் ஆழ் நிலைத் தியானம் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதி உள்ளார். புனிதை பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுனர்களுள் ஒருவர். *இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண் புனிதை* இவர் தான்.

புனிதை,  தந்தை *அல்போன்சோ சான்சேஸ் டீ சேப்பேடா* தாய் *பெயாட்ரிஸ் டீ அஹுமதா* என்ற உத்தம கத்தோலிக்க பெற்றோர்களுக்கு அன்பு மகளாக 1515ம் ஆண்டு மார்ச் 28ம் நாள் *அவிலா என்ற ஊரில்  பிறந்தார். இதனால் இவர் அவிலா நகர் தெரேசா என்று அழைக்கப்படுகிறார்*. இவரின் உடன் பிறந்தவர்கள் 11 பேர்கள். இவர்களில் புனிதையே பெற்றோரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இவர் சிறுபிள்ளையாக இருந்தபோதே, திருக்காட்சியின் வழியாக, தான் துன்பப்பட்டுத் தான் இறப்பேன் என்பதை அறிந்து, அதை மற்றவர்களிடமும் கூறி வந்தார்.

நம் புனிதை இளம் வயதில் பெற்றோர்களால் 
உத்தம, கத்தோலிக்க பக்தி விவாசத்தில் வளர்க்கப்பட்டார். பெற்றோர்கள் அறிவுறுத்துதலின் படி இவர் *புனிதர்களின் சரித்திரத்தை படித்து , தானும் புனிதர்கள் போல் வாழவேண்டும்* என்று உறுதி பூண்டார். அவ்வாறே எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ஏழு வயதில் தன் சகோதரனுடன் மூர் இனத்தவர் மத்தியில் இறைப் பணிசெய்து வேதசாட்சியாக மரிக்க வீட்டை விட்டு ஓடினார். பின் வீட்டிற்கு  சித்தப்பவால் கூட்டி வரப்பட்டார். பனிரெண்டு வயதில் தாயை இழந்தார். அப்பொழுது இவர் அடைந்த துக்கத்திற்கு அளவில்லை.  நம் தேவதாயின் சுரூபத்திற்கு முன் கண்ணீர் விட்டு அழுது, அன்னை அவர்கள் தனக்கு இனி தாயாக இருக்கும்படி வேண்டிக்கொண்டார். புனிதை சொல்கிறார்:

*" I threw myself down in despair before an image of the Mother of God. With many tears, I implored the Holy Virgin to become my mother now. Uttered with the simplicity of a child, this prayer was heard. From that hour on, I never prayed to the Virgin in vain"*

புனிதை பின் சிறிது காலம் உலக போக்கின் படி வாழ்ந்தார்.பின் மனம் மாறி இவர் விரும்பியவாறே 1535ம் ஆண்டு கார்மேல் சபை துறவி ஆனார். 

பிறகு அங்கே நோய்வாய்பட்டு 4 நாட்கள் சுயநினைவை இழந்து, கோமாவில் இருந்தார். அதன்பிறகு பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். அச்சமயத்தில், நம் ஆண்டவர் இயேசு சிலுவையில் துன்பப்படுவதை திருக்காட்சியாகக் கண்டார். பின் தனது 45ம் வயதில் மீண்டும் தான் மிக துன்பப்பட்டு உயிர்விடப் போவதாக மீண்டும் திருக்காட்சியை கண்டார். இதனால் புனிதை அம்மடத்தை விட்டு வெளியேறி, தனியாக மற்றொரு மடத்தில் வாழ அனுமதிக்கப்பட்டார். இவர் அம்மடத்தில் மிக கடுமையான ஒழுங்குகளோடு ஜெப வாழ்வு வாழ்ந்தார். *ஜெபம் ஒன்றையே தன் உயிர் மூச்சாகக் கொண்டார்*. இவரின் ஜெப வாழ்வால்  மற்றொரு துறவற மடத்தையும் நிறுவினார். *இவர் நிறுவிய துறவற இவ்லங்கள் அனைத்துமே மௌனத்தையும் கடுமையான எளிமையையும், காலணிகள் அணியாமலும், மிக எளிமையான உணவையும் உண்டு, ஜெபவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தும் வாழ்ந்தனர்.*

புனிதை பல முறை திருக்காட்சி கண்டார். இவைகளை 400க்கும் மேற்பட்ட கடிதங்களில் எழுதி வைத்தார்.. இவர் ஸ்பெயின் நாட்டு மக்களால் *திருக்காட்சியின் மறைவல்லுநர்* என்று அழைக்கப்பட்டார். இவர் தனது திருக்காட்சிகளின் வழியாக திருச்சபைக்கு பலவிதங்களில் உதவி  செய்தார்

பின் புனிதை,  சபையின் தலைமை சகோதரி ஆகி சபையில்  பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். கத்தோலிக்க திருச்சபையில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு காரணமாக இருந்தார். தன் சுயசரிதை முதலான பல ஆன்மீக புத்தகங்களை   எழுதியுள்ளார். புனிதை தனக்கு வந்த கஷ்டங்களையும்,நோய் நோக்காடுகளையும் மிக பொறுமையுடன் அனுபவித்தார். இறுதியில் கடின நோய்வாய்ப்பட்டு 1582ம் ஆண்டு அக்டோபர் 4ம் நாள் தன்னுடைய 67ம் வயதில்,காட்சியில் கண்ட ஆண்டவரை நேரில் கண்டு தரிசிக்க சென்றார்.

நம் புனிதை நமது திருச்சபையில் உள்ள *நான்கு பெண் மறைவல்லுனர்களில்  ஒருவர்*.(1. our saint St. Teresa of Avila 2.St. Catherine of Siena 3.St. Thérèse of Lisieux 4.St. Hildegard of Bingen.பிற மூன்று பெண் மறைவல்லுனர்கள் பற்றி முன்னமே நாம் அறிந்து கொண்டோம்.

நம் புனிதை தான் *முதல் பெண் மறை வல்லுனர்*. இவருக்கு 1622ம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.



Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL