இவர்களின் விழா நாள் நினைவை (விருப்ப) *நினைவு திருப்பலி* கொண்டாடி புனிதர்களுக்கு மரியாதை வணக்கம் அஞ்சலி செலுத்த தாய் திருச்சபை அழைக்கின்றது.
நம் புனிதர்கள் மூன்றாம் நூற்றாண்டை தேர்ந்த *இரட்டை சகோதரர்கள்*. அரேபியாவை சேர்ந்த புகழ் பெற்ற கிறிஸ்தவ *மருத்துவர்கள*.இவர்கள் அறிவியலும் மருத்துவமும் பயின்றவர்கள். இவர்கள் ரோமை பேரரசின் கீழ் இருந்த சிரியா துறைமுகப்பகுதி மற்றும் சிசிலியா கடற்கரை அருகே *இலவசமாக* பணம் வாங்காமல் மருத்துவ சேவை செய்தனர். இதனால் இவர்கள் *காசு பணம் இல்லாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர்*
.
இவ்வாறு நம் புனிதர்கள் மக்கள் போற்றி புகழும் படி சிறப்பான பணி செய்தார்கள். அம்மக்களுக்கு மத்தியிலும் நோயாளிகளுக்கு மத்தியிலும் பணி செய்து வாழ்வதில் நிறைவு கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதனால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தனர்.
நம் புனிதர்களின் தியாகங்கள்,புனித வாழ்க்கை, குணமளிக்கும் சக்தி ஆகியவற்றினால் ஆட்க்கொள்ளப்பட்டு பலர் கிறிஸ்தவர்கள் ஆனார்கள். இதனால் பொறாமை கொண்ட பேரரசன் தியோக்கிளேசியன் கிறிஸ்தவர்களை துன்புறுத்திய போது இவர்களும் பிடிக்கப்பட்டு, கல்லால் எறியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, சித்ரவதைகள் படுத்தப்பட்டு, இறுதியில் தலை வெட்டப்பட்டு மரித்தனர்.
இவர்கள் *ஆதி கிறிஸ்துவ வேதசாட்சிகள்*. இவர்களுடைய பெயர்கள் திருப்பலியில் *நற்கருணை மன்றாட்டில்*(Canon of the Holy Mass) ,புனித மரியா,புனித யோசேப்பு........கோஸ்மாஸ்,தமியான் என வாசிக்கப்படுகின்றது. *புனிதர்கள் பிராத்தனையிலும்* இவர்கள் இருவரின் பெயர்கள் உள்ளது.
நம் புனிதர்களின் பெயரால் ரோம் நகரில் பல ஆலயங்கள் உள்ளன. மேலும் பல மருத்துவமனைகளும் இவர்கள் பெயரில் கட்டப்பட்டுள்ளன.
இவர்கள்,அறுவை மருத்துவர்கள், மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், குழந்தைகள், முடி வெட்டுபவர்கள், மருந்தாளுநர்கள், அனாதை இல்லங்கள், குழந்தை பாதுகாப்பு மையங்கள், இனிப்பு தயாரிப்பவர்கள் குடலிறக்கத்தால் அவதியுறுவோர், தோற்று நோயாளிகள்,இவர்களுக்கு *பாதுகாவலர்கள்.*
அனைவருக்கும் புனித கோசமாஸ்,புனித தமியான் நினைவு தின வாழ்த்துக்கள்
புனித கோஸ்மாஸ், புனித தமியான் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.